நடிகர் துல்கட் சல்மான் இந்திய அளவில் பிரபலமான மலையாள நடிகர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | “பான் இந்தியா படம்னே ஒன்னு இல்ல”.. மார்டின் படவிழாவில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசியது என்ன?
நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் நடித்த சோலோ, குரூப் உள்ளிட்ட படங்கள் பான் இந்திய திரைப்படங்களாக அமைந்தன. தமிழில் ஓ காதல் கண்மணி திரைப்படம் மூலம் பிரபலமான துல்கர் சல்மான், அதன் பிறகு தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம், அண்மையில் ஹே சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பிலான அடுத்த படம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆம், இப்படத்தை கார்த்திக் வேலப்பன் (இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர்) இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. துல்கர் சல்மானின் 36வது திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ் & தெலுங்கில் கமர்ஷியல் எண்டர்டெயின் படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கைகோர்க்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | "சூரரைப்போற்று" படத்தை தொடர்ந்து இவரது BIOPIC-ல் நடிக்கும் சூர்யா..? இயக்குநர் இந்த நடிகரா..?