நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான 'குருப்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழகத்தில் முதல் வாரத்தில் பல்வேறு திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. துல்கர் சல்மானின் அசத்தலான நடிப்பு, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் துல்லியமான இயக்கம், நிமிஷ் ரவியின் கச்சிதமான ஒளிப்பதிவு, சுஷின் ஷாமின் துள்ளலான இசை என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பே படத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் 'குருப்' வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியானது 'குருப்'. உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர். Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார்.