KGF யாஷ் கொடுத்த விருந்து.. நெகிழ்ந்துபோன துல்கர் சல்மானின் வைரல் போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது நடிகர் யாஷ் குறித்து நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்ட விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | வீட்ல விசேஷம்!! வளைகாப்பு குறித்து பிரபல நடிகை நெகிழ்ச்சி பதிவு..!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் மம்முட்டி. இவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு 'செகண்ட் ஷோ' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் துல்கரின் கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Images are subject to © copyright to their respective owners.

அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சீதாராமம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கியமான  வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ஒருவர் நடிகர் யாஷ் குறித்து சில வார்த்தைகள் கூறும்படி கேட்டிருந்தார். அவருக்கு பதில் அளித்திருந்த துல்கர் தனக்கு யாஷ் கொடுத்த விருந்து குறித்தும் அவர் அன்புள்ளம் கொண்டவர் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் யாஷ் குறித்து துல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"அன்புள்ளம் கொண்ட சிறந்த புரவலர். நாங்கள் இருவரும் மைசூரில் படப்பிடிப்பில் இருந்தபோது சாப்பிடுவதை விட அதிகமான உணவை எனக்கும் எனது குழுவினருக்கும் அனுப்பி வைத்திருந்தார். ராக்கிங் ஸ்டாருக்கு எனது அன்பு" எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | பச்சை குத்திக் கொண்ட நடிகை சதா.. வீகன் டாட்டூவா..? வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan tweet about actor Yash caring while shooting

People looking for online information on Dulquer salmaan, Dulquer Salmaan tweet, KGF Yash, Yash will find this news story useful.