'சிம்பு'வை தொடர்ந்து..CWC-யில் என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. "செட்டே சும்மா அமர்க்களம் ஆயிடுச்சே"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி எனப்படும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று.

Advertising
>
Advertising

பாலிவுட் நடிகருடன்.. அரபிக்குத்து டான்ஸ் போட்ட 'தளபதி 66' நடிகை.. மூவ்மென்ட்ஸ் சும்மா அள்ளுது

முதல் இரண்டு சீசன்களை போலவே, தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே, போட்டியாளர்களாக வரும் பிரபலங்களுடன் ஜோடி சேரும் கோமாளிகள் தான்.

'குக் வித் கோமாளி' பிரபலம்

சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வந்து, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல, இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக வந்த அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியின் கிடைத்த பிரபலம் மூலம், நிறைய திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

புதிய சீசனும் அமர்க்களம்

மூன்றாவது சீசனிலும், சில புதிய கோமாளிகள், புதிய போட்டியாளர்கள் என மொத்த செட்டும் அமர்க்களமாக உள்ளது. இந்நிலையில், இந்த வார எபிசோடில் இளம் நடிகர் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ப்ரோமோக்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

அசத்தல் 'Guest'

கடந்த சீசனின் இறுதி போட்டியில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டிருந்தார். போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் சேர்ந்து கொண்டு, சிம்பு அடித்த லூட்டிகள், அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதே வரிசையில் நடிகர் துல்கர் சல்மான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஹே சினாமிகா

அவரது நடிப்பில் 'ஹே சினாமிகா' திரைப்படம், கடந்த 3-ஆம் தேதி வெளியாகியிருந்தது. தொடர்ந்து, இந்த படத்தின் படக்குழு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். துல்கர் சல்மான், நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் படத்தின் இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய ப்ரோமோக்கள்

துல்கர் சல்மானைக் கண்டதும், நிகழ்ச்சியின் பெண் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் உற்சாகம் அடைந்தனர். அதே போல, பாலாவுடன் அதிதி நடனமாடும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இந்த ப்ரோமோக்கள், வரும் வாரத்திற்கான எபிசோடு மீது, எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

'சீசன் 2' வின்னர்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன், துல்கருடன் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில், நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக, நிரஞ்சனி நடித்திருந்தார். இவரது சகோதரியான கனி தான், கடந்த 'குக் வித் கோமாளி' இரண்டாவது சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

"வந்த அன்னைக்கே நோண்டுறாங்களே" ரம்யாவிடம் சரமாரி கேள்விகள்..லெஃப்ட்,ரைட் வாங்கிய அனிதா,தாமரை

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer salmaan special guest in cook with comali season 3

People looking for online information on குக் வித் கோமாளி, துல்கர் சல்மான், ஹே சினாமிகா, Cook with comali, Cook With Comali Season 3, CWC3, Dulquer salmaan, Special guest, Vijay tv will find this news story useful.