துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிக்கும் சீதா ராமம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
Also Read | DON: டான் படத்தின் கதை இது தான்.. பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு வெளியிட்ட மிரட்டல் தகவல்
இயக்குனர் ஹனு ராகவபுடி போர் பின்னணியில் ஒரு கண்கவர் காதல் கதையை உருவாக்கி வருகிறார். சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர். ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் இசை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மயக்கும் காதல் கதையை மதன் கார்க்கி தனது பாடல் வரிகளால் ஈர்த்துள்ளார், அதே சமயம் எஸ்.பி.சரண் மற்றும் ரம்யா பெஹாரா பாடலை பாடியுள்ளனர். விண்டேஜ் இளையராஜா-எஸ்பிபி இசையமைப்பின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு இனிமையான மெல்லிசை பாடலாக, இது கேட்பவர்களை உடனடியாகக் கவரும்.
பாடல் காட்சியில் துல்கர் மற்றும் மிருணாள் இடையேயான கெமிஸ்ட்ரி மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்யியுள்ளனர்.
இந்த படம் 60களின் பின்னணியில் உருவாகி உள்ளது. திரைப்படத்தின் முதல் தோற்றத்தில், 1960 களில் உள்ள காட்சியமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. முக்கியமாக போஸ்டர்களில் படத்தின் தனித்துவம் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. போரூற்றி வளர்த்த காதல் கதை எனும் அடைமொழியுடன் படத்தின் அனைத்து போஸ்டர்களும் ரிலீஸ் செய்யப்பட்டன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8