இன்று மலையாள நடிகர் துல்கர் சல்மானின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து அடுத்து வரவிருக்கும் தெலுங்கு படத்திலிருந்து அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு இன்று வெளியிட்டனர்.
பெயரிடப்படாத இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ரானுவ வீரர் வேடத்தில் நடிக்கவுள்ளார் துல்கர், இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார் . கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் துல்கரின் இரண்டாவது படம் இதுவாகும்.
இந்த படத்திற்கு இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான P. S. வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்றத்தில், 1960 களில் உள்ள காட்சியமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. முக்கியமாக மழை பொழிவுடன் கூடிய ரயில் நிலைய காட்சியில் படத்தின் தனித்துவம் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. இப்போதைக்கு தயாரிப்பு எண் 7 என்ற தலைப்பில் இந்த படம் உருவாகிறது.
துல்கர் சல்மான் கள்ளனாக நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கிரைம் த்ரில்லர் படமான 'குருப்' வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், சோபிதா துலிபாலா, இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர்.
இது போக போலிசாக நடித்த மலையாள ஆக்ஷன் த்ரில்லர் 'சல்யூட்' மற்றும் தமிழ் படமான 'ஹே சினாமிகா' ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.