வார நாட்களில் மாஸ் காட்டும் 'சீதா ராமம்'.. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் BOX OFFICE வசூல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் ஆகஸ்ட் மாதம் 5ல் வெளியான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இத சாப்ட்டு Workout பண்றவங்க ஒன்னா இருப்பாங்க" - ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு.!

நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் பாஸிட்டிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை 'சீதா ராமம்' பெற்றது.

நேற்று வரை 'சீதா ராமம்' உலகம் முழுவதும் 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வார‌ நாட்களிலும்  படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர்.

மேலும் 'சீதா ராமம்' திரைப்படம், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் எட்டு விடுமுறை நாட்கள் இருப்பதால், பார்வையாளர்கள் பெரிதளவில் இப்படத்தினை கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. திங்கட்கிழமை அன்று நடைபெற்ற முன் பதிவு விற்பனையுடன் சேர்த்து 600K அமெரிக்க டாலர்களை (4.77 கோடி இந்திய ரூபாய்) சீதா ராமம் படம் வசூலாக கடந்துள்ளது.

இந்தப்படம் விரைவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

காவிய காதல் கதையான 'சீதா ராமம்', போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்து வருகிறது.

திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு... இயக்குவர் ஹனுராகவபுடியின் பிரத்யேகமான எழுத்து மற்றும் இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மயக்கும் இசை... பி எஸ் வினோத்தின் பிரமிக்கத்தக்க ஒளிப்பதிவு..ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

 

Also Read | A.R. ரஹ்மானுடன் நடிகர் நெப்போலியன் சந்திப்பு.. இதான் காரணமா? அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Box Office Collection

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sita Ramam, Sita Ramam Box Office Collection will find this news story useful.