பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் துல்கர் சல்மான் நடித்த "குருப்".. எந்த TV? செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படம் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இது தான் பஹத் பாசிலோட செல்லப் பெயரா? நஸ்ரியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் இந்த படம் வெளியானது.‌

ஒரே சமயத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் வெளியானது 'குருப்'. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்தது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், 35000 காட்சிகள் திரையிடப்பட்டது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

கேரளத்தில் 1984ல் இருந்து இன்னும் முடிக்கபடாத வழக்கின் கொலை குற்றவாளியான சுகுமாறன் குருப் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் குருப்.

இந்த படத்தில் கையாளப்பட்டுள்ள உண்மைச்சம்பவம் படு சுவாஸ்யமானது. 1984 ஜனவரி 22 ஆம் தேதி கேரளாவில் குன்னம் என்ற ஊரில் நெடுஞ்சாலை NH-47ல் ஒரு அம்பாசிடர் கார், உள்ளே ஒரு மனிதனுடன் எரிந்து கொண்டிருப்பதை சிலர் பார்த்து போலீஸ்க்கு தகவல் கொடுக்க போலிஸ் விசாரணையை தொடங்குகிறது.

முதல் விசாரணையில் அது சுகுமாற் குருப்பின் கார் என்பதும், காரில் இறந்து இருப்பதும் குருப் தான் என தெரிகிறது.பின் பிரேத பரிசோதனைக்கு பின் இறந்தது குருப் இல்லை என உறுதியாக போலிஸ் விசாரனையை முடுக்கி விடுகிறது. இறந்தது யார் என விசாரிக்கும் போது ஒரு தியேட்டரில் வேலை பார்க்கும் சாக்கோ என்ற நபர் என தெரய வருகிறது. போலிஸ் விசாரணையை முடுக்கி விட சாக்கோவின் நண்பன் ஸாகு போலிசிடம் பிடிபடுகிறான்.

ஸாகு, பாஸ்கரப்பிள்ளை, குருப், பொன்னப்பன் ஆகிய நால்வரும் சேர்ந்து  சாக்கோவை கொலை செய்தது போலிஸ் விசாரனையில் தெரிய வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தை ஆராயும் போது போலிசுக்கு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. சுகுமாரக்குருப் அபுதாபியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்தால் குருப்புக்கு 8 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. குருப்புக்கு அவசரமாக பணம் தேவைப்பட தான் இறந்துவிட்டதாக திட்டம் போட்டு இன்சூரன்ஸ் பணத்தை பெற தன் மைத்துனர் பாஸ்கரப்பிள்ளையிடம் சேர்ந்து திட்டம் போடுகிறார். இந்த திட்டத்தில் குருப் உடன் பொன்னப்பன், ஸாகுவும் இணைகிறார்கள்.

நால்வரும் குருப் போல ஒரு பிணத்தை தேடி மருத்துவமனைகளில் உள்ள மார்ச்சுவரிகளுக்கு விசிட் அடிக்கிறார்கள். ஆனால் குருப்பினை போன்ற உடல் எங்கும் கிடைக்கவில்லை. பின் KLY 5959 காரில் குருப்பும், KLQ 7831 என்ற காரில் மற்ற மூவரும் குருப்பை போன்ற ஆளைத் தேடி நெடுஞ்சாலை NH47ல் பயணம் செல்கிறார்கள். வழியில் சாக்கோ எனும் தியேட்டர் ஊழியர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல இவர்கள் வந்த காரை  லிஃப்ட் கேட்டு நிறுத்த, சாக்கோவை காரில் ஏற்றுகின்றனர்.

சாக்கோவை கொல்ல முடிவெடுத்து சாக்கோவுக்கு விஸ்கியை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கின்றனர். போதையில் உள்ள சாக்கோவை குருப்பு தலையில் அடிக்க  மூச்சுத்திணறி சாக்கோ இறக்கிறார். சாக்கோவின் உடலை பாஸ்கரப்பிள்ளையின் வீட்டிற்கு கொண்டு போகிறார்கள்.  சாக்கோவின் உடையை கழட்டிவிட்டு பாஸ்கரப்பிள்ளை சாக்கோவின் முகத்தை எரிக்க எரிக்கும் போது பாஸ்கரப்பிள்ளையின் கையில் தீக்காயம் ஏற்ப்பட்டுவிடுகிறது. பின் உடலை NH 47ல் காரினுள் வைத்து எரித்துவிட்டு போகின்றனர். போலிஸ் விசாரனையில் ஸாகு அப்ரூவராக மாற பாஸ்கரப்பிள்ளை, பொன்னப்பனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

சுகுமாற குருப்புவை 1984 முதல் இன்று வரை போலீசால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சுகுமாற குருப்பாக துலகர் சல்மானும், சாக்கோவாக டொவினோ தாமசும் நடித்துள்ளனர்.

"குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர். Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார்.

வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான ஜி குரூப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் விரைவில் ஜி குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில் முதல்முறையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த படம் மலையாள மொழி ஜி கேரளம் தொலைக்காட்சியிலும் தமிழ் மொழியில் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதில் மலையாள ஒளிபரப்புக்கான ப்ரோமோ வீடியோ காட்சிகள் ஜி கேரளம் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன.

 

Also Read | துல்கர் சல்மான் & மிருணாள் நடித்த 'சீதா ராமம்'.. அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Kurup movie World Television Premiere on Zee Keralam

People looking for online information on Dulquer salmaan, Kurup movie, Kurup movie Television Premiere, Zee Keralam will find this news story useful.