VIDEO: உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் துல்கர் சல்மானின் குருப் படத்தின் விளம்பரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி “குரூப்” - இன் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”.

Advertising
>
Advertising

மலையாள மொழி தாண்டி, மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் நாளை 2021 நவம்பர் 12 ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. “குருப்” திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர். Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார். ‘குரூப்’ திரைப்படம் 2021 நவம்பர் 12 திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ’குருப்’ படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின்உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்துள்ளது குருப் தயாரிப்பு தரப்பு. 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது. இந்த உலகின் உயரமான கட்டிடத்தில் துல்கர் சல்மானின் உருவத்தோடு வீடியோ ஒளிபரப்பானது.

இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். இது குறித்து துலகர் தனது யூடியூப்பில் வீடியொ வெளியிட்டுள்ளார். அதில் இந்த நிகழ்வை கனவாக இருப்பதாக வர்ணித்துள்ளார். இந்த கட்டிடம் கட்டும் போது துபாயில் வேலை பார்த்ததாகவும், தற்போது இந்த நிகழ்வு தன் வாழ்வில் மிக முக்கியமான வரலாற்று சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

VIDEO: உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் துல்கர் சல்மானின் குருப் படத்தின் விளம்பரம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Kurup movie Lights up Burj Khalifa

People looking for online information on Dulquer salmaan, Kurup will find this news story useful.