மேடை அருகே கண்ணீர் விட்ட ரசிகர்.. உடனடியா துல்கர் செய்த விஷயம்.. வைரல் சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள திரைப்படங்கள் மட்டுமில்லாமல், தென்னிந்திய சினிமாவிலும், பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் துல்கர் சல்மான்.

Dulquer salmaan fan emotional in sita ramam movie event
Advertising
>
Advertising

Also Read | VIP தனுஷின் டிரேட் மார்க் ஃபைட் சீனுடன் "வாத்தி" படத்தின் தெறிக்கும் புதிய போஸ்டர்!

இவரின் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள "சீதா ராமம்" என்னும் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அதே போல, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, கவுதம் வாசுதேவ் மேனன்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார். மேலும், விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Dulquer salmaan fan emotional in sita ramam movie event

1960 களில், போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்தி உருவாகி உள்ள சீதா ராமம் திரைப்படத்தின் டிரைலர், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. பாடல்கள் மற்றும் டிரைலர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சீதா ராமம் திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு "U" சான்றிதழும் வழங்கி இருந்தது. மேலும் சீதா ராமம் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நிகழ்ச்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சீதா ராமம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு, கொச்சியில் உள்ள மாலில் வைத்து நடைபெற்றிருந்தது.

அப்போது அங்கே ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்த நிலையில், மேடைக்கு அருகே திடீரென்று ஒரு ரசிகர் கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டார். துல்கரைக் கண்ட ஆனந்தத்தில் அந்த ரசிகர் கண்ணீர் வடிக்கவே உடனடியாக மேடைக்கு அழைத்த துல்கர், அவரைக் கட்டித் தழுவி தேற்றவும் செய்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடந்த இந்த எமோஷனல் தருணத்தையும் பார்த்து நெகிழ்ந்து போய் வருகின்றனர்.

Also Read | லோக்கல் ரயிலில் பயணம் செய்த விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே! இதான் காரணமா?

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer salmaan fan emotional in sita ramam movie event

People looking for online information on Dulquer salmaan, Dulquer salmaan fan, Sita ramam movie event will find this news story useful.