கேரளத்தில் 1984ல் இருந்து இன்னும் முடிக்கபடாத வழக்கின் கொலை குற்றவாளியான சுகுமாறன் குருப் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் குருப்.
துல்கர் சல்மான் நடித்து தயாரித்து நடித்துள்ள இந்தப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ்,அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார், இவர் துலகர் சல்மானை அறிமுகபடுத்திய இயக்குனர் ஆவார். இந்த படத்தில் கையாளப்பட்டுள்ள உண்மைச்சம்பவம் படு சுவாஸ்யமானது. 1984 ஜனவரி 22 ஆம் தேதி கேரளாவில் குன்னம் என்ற ஊரில் நெடுஞ்சாலை NH-47ல் ஒரு அம்பாசிடர் கார், உள்ளே ஒரு மனிதனுடன் எரிந்து கொண்டிருப்பதை சிலர் பார்த்து போலீஸ்க்கு தகவல் கொடுக்க போலிஸ் விசாரணையை தொடங்குகிறது.
முதல் விசாரணையில் அது சுகுமாற் குருப்பின் கார் என்பதும், காரில் இறந்து இருப்பதும் குருப் தான் என தெரிகிறது.பின் பிரேத பரிசோதனைக்கு பின் இறந்தது குருப் இல்லை என உறுதியாக போலிஸ் விசாரனையை முடுக்கி விடுகிறது. இறந்தது யார் என விசாரிக்கும் போது ஒரு தியேட்டரில் வேலை பார்க்கும் சாக்கோ என்ற நபர் என தெரய வருகிறது. போலிஸ் விசாரணையை முடுக்கி விட சாக்கோவின் நண்பன் ஸாகு போலிசிடம் பிடிபடுகிறான்.
ஸாகு, பாஸ்கரப்பிள்ளை, குருப், பொன்னப்பன் ஆகிய நால்வரும் சேர்ந்து சாக்கோவை கொலை செய்தது போலிஸ் விசாரனையில் தெரிய வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தை ஆராயும் போது போலிசுக்கு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. சுகுமாரக்குருப் அபுதாபியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்தால் குருப்புக்கு 8 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. குருப்புக்கு அவசரமாக பணம் தேவைப்பட தான் இறந்துவிட்டதாக திட்டம் போட்டு இன்சூரன்ஸ் பணத்தை பெற தன் மைத்துனர் பாஸ்கரப்பிள்ளையிடம் சேர்ந்து திட்டம் போடுகிறார். இந்த திட்டத்தில் குருப் உடன் பொன்னப்பன், ஸாகுவும் இணைகிறார்கள்
நால்வரும் குருப் போல ஒரு பிணத்தை தேடி மருத்துவமனைகளில் உள்ள மார்ச்சுவரிகளுக்கு விசிட் அடிக்கிறார்கள். ஆனால் குருப்பினை போன்ற உடல் எங்கும் கிடைக்கவில்லை. பின் KLY 5959 காரில் குருப்பும், KLQ 7831 என்ற காரில் மற்ற மூவரும் குருப்பை போன்ற ஆளைத் தேடி நெடுஞ்சாலை NH47ல் பயணம் செல்கிறார்கள். வழியில் சாக்கோ எனும் தியேட்டர் ஊழியர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல இவர்கள் வந்த காரை லிஃப்ட் கேட்டு நிறுத்த, சாக்கோவை காரில் ஏற்றுகின்றனர்.
சாக்கோவை கொல்ல முடிவெடுத்து சாக்கோவுக்கு விஸ்கியை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கின்றனர். போதையில் உள்ள சாக்கோவை குருப்பு தலையில் அடிக்க மூச்சுத்திணறி சாக்கோ இறக்கிறார். சாக்கோவின் உடலை பாஸ்கரப்பிள்ளையின் வீட்டிற்கு கொண்டு போகிறார்கள். சாக்கோவின் உடையை கழட்டிவிட்டு பாஸ்கரப்பிள்ளை சாக்கோவின் முகத்தை எரிக்க எரிக்கும் போது பாஸ்கரப்பிள்ளையின் கையில் தீக்காயம் ஏற்ப்பட்டுவிடுகிறது. பின் உடலை NH 47ல் காரினுள் வைத்து எரித்துவிட்டு போகின்றனர். போலிஸ் விசாரனையில் ஸாகு அப்ரூவராக மாற பாஸ்கரப்பிள்ளை, பொன்னப்பனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
சுகுமாற குருப்புவை 1984 முதல் இன்று வரை போலீசால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சுகுமாற குருப்பாக துலகர் சல்மானும், சாக்கோவாக டொவினோ தாமசும் நடித்துள்ளனர். இந்த குருப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் உண்மைக்கதையை வைத்து மலையாளத்தில் பின்னெயும் என்கிற படமும், NH47 என்கிற படமும் வெளிவந்துள்ளன, இந்த படங்களை தொடர்ந்து குருப் படம் வரும் நவம்பர் 12 அன்று வெளியாக உள்ளது. தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
இதனையொட்டி துல்கர் சல்மான் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.