துல்கர், காஜல், அதிதி நடிச்ச “ஹே சினாமிகா” ஓடிடியில்.. வெளியான ரிலீஸ் தேதி ரிலீஸ் தேதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹையாத்ரி ஆகியோர் நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான ஹே சினாமிகா திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Advertising
>
Advertising

மாமன்னன் படத்தின் அடுத்த அப்டேட்… தெறி போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

துல்கரின் தமிழ் படங்கள்…

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு துல்கர் சல்மானின் அறிமுகம் கிடைத்தது வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம்தான். அதன் பின்னர் "ஓ காதல் கண்மணி" கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

ஹே சினாமிகா

இதையடுத்து சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹே சினாமிகா'. இப்படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கி இருந்தார். அவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

Feel good சினிமா

உற்சாகம் மிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த துல்கர், காஜல் மற்றும் அதிதி ஆகிய மூவருக்கும் பாராட்டுகளும் குவிந்தன.

ஹே சினாமிகா ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் இப்போது ஹே சினாமிகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜியோ சினிமாஸில் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oscar 2022 : வில் ஸ்மித் அடித்தது குறித்து நடிகை சமந்தா போட்ட வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer kajal agarwal aditi Rao hey sinamika ott release date announced

People looking for online information on Aditi Rao Hydari, Brinda, Dulquer salmaan, Hey Sinamika, Hey Sinamika Release on OTT, Kajal Aggarwal, Nakshatra Nagesh will find this news story useful.