பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று காலமானார்.
Also Read |ஷாருக்கான் நடித்த 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் முதல்நாளிலே அதிக வசூல்! இத்தனை கோடியா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீனிவாச மூர்த்தி நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் போன்ற தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். நடிகர் அஜித் குமாரின் விஸ்வாசம், விவேகம் போன்ற தெலுங்கு டப்பிங் திரைப்படங்களுக்கும் ஸ்ரீனிவாச மூர்த்தி டப்பிங் பேசியுள்ளார். சூர்யா நடித்த கஜினி, சிங்கம் சீரிஸ், 24 ஆகிய படங்களுக்கு ஸ்ரீனிவாச மூர்த்தி தான் டப்பிங் பேசியுள்ளார்.
விக்ரம் நடித்த அந்நியன் படத்தின் தெலுங்கு டப்பிங் 'அபரிசித்துடு' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
மலையாளத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட மோகன் லால் படங்களுக்கும் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். ஆல வைகுண்ட புரமுலு படத்தில் நடிகர் ஜெயராமுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஶ்ரீனிவாச மூர்த்தி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | பிரபல மலையாள நடிகருடன் சூர்யா - ஜோதிகா... இணையத்தை கலக்கும் புகைப்படம்