VIDEO : AR ரஹ்மான் & AR அமீன் பர்த்டே.. தெறி BEAT-உடன் வாழ்த்திய ட்ரம்ஸ் சிவமணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிரம்ஸ் கலைஞர் டிரம்ஸ் சிவமணி தமிழகத்தில் இருந்து பிரபலமான இந்திய இசைக்கலைஞர் ஆவார். முன்னணி இசையமைப்பளர்கள் பலருக்கும் இவர் டிரம்ஸ் வாசித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்.. ரஜினி வெளியிட்ட உருக்கமான இரங்கல்.!.!

முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளின் நிமித்தமாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.எம்.ஸ்டுடியோவில் வாசித்தது குறித்த வீடியோவை டிரம்ஸ் சிவமணி பதிவிட்டிருந்தார்.

அதில், பொன்னின் செல்வன் திரைப்படத்தின் ரீ-ரெக்கார்டிங்கிற்காக டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருப்பதாகவும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், உற்சாகம் தரும் பணியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்த டிரம்ஸ் சிவமணி, தமது  இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இதேபோல் தமன் இசையிலான வாரிசு படத்தில் பணிபுரிந்தவர் என்கிற முறையில்,  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் டிரம்ஸ் சிவமணி வாசித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது இசை அமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக ஹேப்பி பர்த்டே பாடிக்கொண்டே டிரம்ஸ் சிவமணி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் மகனும் பின்னணி பாடகரும் இளம் இசைக்கலைஞருமான ஏ.ஆர்.அமீனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் 'தெய்வத்திருமகள்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்த சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'Quotation Gang' எனும் பான் இந்திய திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் டிரம்ஸ் சிவமணி.

க்ரைம் திரில்லர் திரைப்படமான 'Quotation Gang' உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்

தொடர்புடைய இணைப்புகள்

Drums Sivamani Birthday Wishes to AR Rahman AR Ameen

People looking for online information on AR Ameen, AR Rahman, Drums sivamani will find this news story useful.