நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான காமெடி திரைப்படங்கள் A1 மற்றும் டகால்டி.
லொள்ளு சபா மாறன், சேதுராமன், ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் என தனக்கே உரிய டீமை வைத்துக்கொண்டு இந்த படங்களில் சந்தானம் நகைச்சுவையில் வெரைட்டி காட்டினார்.
இந்நிலையில் தான் A1, டகால்டி, படங்களின் தயாரிப்பாளரும், பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான எஸ்.பி.சௌத்ரிக்கு இன்று பிறந்தநாள் (ஜூலை 15).
இதனை அடுத்து இவருக்கு, திரை பிரபலங்கள் இயக்குநர் சசிகுமார், நடிகர் சந்தானம், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ஆடுகளம் நரேன், லொள்ளு சபா மாறன், சுவாமி நாதன், தங்கதுரை, மனோகர், இயக்குநர் ராம் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, அம்மா கிரியேசன்ஸ் சிவா, பெப்சி சிவா உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இவர், தனது 18ரீல்ஸ் நிறுவனம் சார்பாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’, என்ற படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தை திலீபன் நடித்த ‘வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லி இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.
க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.
எஸ். பி.சௌத்ரி தற்போது டிரைவர் ஜமுனா படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமாரை வைத்து தனது அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்.