ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாளப்படமான திரிஷ்யம் 2-ஆம் பாகம் தற்போது அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மோகன் லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகமான திரிஷ்யம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த படம் தமிழில் பாபநாசம் என்கிற பெயரிலும் கமல் நடிப்பில்ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ரீமேக் ஆனது.
இதனிடையே திரிஷ்யம் 2-ஆம் பாகத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். திரிஷ்யம் முதல் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது நடிப்பில் தற்போது திரிஷ்யம் 2-ஆம் பாகமும் தெலுங்கில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரிஷ்யம் 2-ஆம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், “திரிஷ்யம் 2 என்னை பிரம்மிக்க வைத்தது. இதுவரை உருவான தொடர்வரிசைப் படங்களிலேயே 2வதாக உருவாகியுள்ள மிகச்சிறந்த படம்” என்று இது குறித்து சிவாவின் நடிப்பில் ‘தமிழ்ப்படம், தமிழ்ப்படம்-2’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும், ‘இதுவரை உருவான தொடர்வரிசைப் படங்களிலேயே 2வதாக உருவாகியுள்ள மிகச்சிறந்த படம் திரிஷ்யம்-2 என்றால் அந்த முதல் படம் என்ன? என்று கேட்டு வருகின்றனர். சிலர் ‘ஒருவேளை அது தமிழ்ப்படம் 2-ஆம் பாகமா?’ என்று ட்வீட்டில் கேட்டு வருகின்றனர்.