நடிகர் கமலஹாசன் தமிழில் நடித்த படம் பாபநாசம். பிரபல மலையாள க்ரைம் த்ரில்லர் படத்தின் ரீமேக் படமான இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி மற்றும் பலர் நடிப்பில் வெளியானது.
ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தின் ஒரிஜினல் மலையாள வெர்ஷனான திரிஷ்யம் படத்திலும் சரி, பாபநாசம் படத்திலும் சரி நாயகனின் கடைசி மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அனில். அவர் தான் தற்போது 58 கிலோ எடையுள்ள உடை அணிந்து பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அவரது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாபநாசம், திரிஷ்யம் படங்களில் சிறுமியாக நடித்த எஸ்தர் அனில் அண்மையில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 படத்தில் நன்றாகவே வளர்ந்துவிட்டார். இந்நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் 58 கிலோ எடையுள்ள உடை ஒன்றை அணிந்து உள்ளார். இதை பகிர்ந்த எஸ்தர் அனில், தன்னுடைய எடையே 48 கிலோ தான் என்கிற சூழ்நிலையில், தான் ஒரு 58 கிலோ எடை கொண்ட உடை அணிந்துள்ளதாக கேப்ஷனுடன் கூடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த உடையை முதன்முதலாக பார்க்கும்போது தனக்கு மிகவும் ஆச்சரியம் ஏற்பட்டதாகவும், இந்த உடை மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.