அடிபொலி!! பிரபல மலையாள நடிகையின் பல நாள் கனவை நிறைவேற்றிய நடிகர் சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொச்சி: பிரபல மலையாள நடிகையின் கனவை நடிகர் சூர்யா நிறைவேற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் சூர்யா நடிப்பில், நாளை (10.03.2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் இது. சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான், கடந்த 2019 ஆம் ஆண்டில், திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இந்த ET படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு, பின் தயாரிப்பு பணிகள் முடிந்து இந்த படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக, நடிகர் சூர்யா கேரள சென்றிருந்தார்.  அப்போது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆத்ய பிரசாத், சூர்யாவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பகிர்ந்து தனது கனவு நிறைவேறிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

காயம்குளத்தைச் சேர்ந்த ஆத்ய பிரசாத், பிரபல மாடல் ஆவார். ஆத்ய பிரசாத் முன்னதாக, குஞ்சாக்கோ போபனின் 'நிழல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நிழலில் அவரது நடிப்பைப் பார்த்த பிறகு இயக்குனர் டார்வின் குரியகோஸ் இவருக்கு 'அன்வேஷிப்பின் கண்டெட்டும்' படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு அளித்துள்ளார். 'முத்துமணி' எனும் கதாபாத்திரத்தில் ஆத்ய பிரசாத் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dream come true moment for Aadhya Prasad with ET suriya

People looking for online information on Aadhya Prasad, ET, Etharkum Thuninthavan, Kerala, Kochi, Suriya will find this news story useful.