சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் டிவீட் செய்துள்ளார்.
Also Read | மூக்குத்தி அம்மனை அடுத்து ‘வீட்ல விசேஷம்!’ RJ பாலாஜி பத்தி ஊர்வசி சொன்னதை பாருங்க..
டான் வெற்றி…
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்த இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன. மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றாலும் ‘டான்’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. திரைப்படத்தின் குறையாக டான் திரைப்படம் Toxic parenting-ஐ ரொமாண்டிசைஸ் செய்வதாக சில விமர்சனங்களும் எழுந்தன.
வெற்றி விழா…
மிகப்பெரிய வெற்றி பெற்ற டான் திரைப்படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கும் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக லைகா சுபாஷ்கரன் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்திர்ந்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.
ராமதாஸ் பாராட்டு…
இதையடுத்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘டான்’ திரைப்படம் வெளியானது. அதையடுத்து திரையரங்கில் பார்க்காத பார்வையாளர்கள் பார்த்து தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ‘டான்’ படம் பார்த்துவிட்டு பதிவிட்ட டிவீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!” எனக் கூறி பாராட்டியுள்ளார். இந்த டிவீட் இணையத்தில் பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது.
Also Read | அமெரிக்க BOX OFFICE-ல் ‘விக்ரம்’ படைத்த சாதனை… இதுவரை இத்தனை கோடி வசூலா?… வெளியான தகவல்