“பிக்பாஸ் பாக்காதீங்க.. NOOO”... 5 பெண்களின் களைகட்டும் அட்ராசிட்டி!.. ஒரே ரகளைதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி களைகட்டத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.

dont watch biggboss5 housemates fun activity goes viral

கிட்டத்தட்ட 100 நாட்கள் நடக்க கூடிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் இந்த வீட்டுக்குள், ஒருவரை ஒருவர் நண்பர்களாக்கி இணைந்து கொள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் எடுத்த எடுப்பிலேயே 18 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டுவிட்டனர்.

dont watch biggboss5 housemates fun activity goes viral

பெரும்பாலும் வயதில் சிறிய போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுள் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிமுகம் உடையவர்கள் மிகக் குறைவான நபர்களாகவே இருந்தாலும் கூட, இத்தனை விரைவாக அனைவரும் ஜெல் ஆகி வருவதுதான் ரசிகர்களுக்கு பாசிட்டிவான ஒன்றாக இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

dont watch biggboss5 housemates fun activity goes viral

இதனிடையே இந்த வீட்டில் ஒரு ஜாலியான ரகளையான டீம் உருவாகிவிட்டது. ஆம், விஜே பிரியங்கா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி மற்றும் நதியா ஆகிய 5 பேர் கொண்ட ஜாலியான ஐவர் பெண்கள் குழு, இமான் அண்ணாச்சியையும் கூட சேர்த்துக்கொண்டு அரட்டை அடிக்க தொடங்கிவிட்டனர்.

அப்போது முதல் கட்டமாக சிரித்துக்கொண்டு நோ என்று கோரஸாக சொல்வது, அடுத்தது கோபமாக நோ என்று கோரஸாக சொல்வது, தொடர்ந்து ரொமான்டிக்காக நோ என்று கோரஸாக சொல்வது என விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர்.

கடைசியில், “அனைவரும் அழுதுகொண்டே நோ என்று சொல்ல வேண்டும்!” என்று இமான் அண்ணாச்சி கூற, அனைவரும் அழுதபடி  “நோ” என்று கூறுகின்றனர். அப்போது பிரியங்கா, “பிக்பாஸ் பார்க்காதீர்கள் நோ...” என்று கூறுகிறார். அதற்கு நதியா, “இதுக்கு பிக்பாஸ் நோ என்று சொல்லிடுவார்!” என்று கவுண்ட்டர் அடிக்கிறார்.

வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் கலகலப்பாக இப்படி எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். இந்த முறை இந்த ஐவர் பெண்கள் குழுவின் அட்ராசிட்டி ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

இதே ஒற்றுமையுடன் இந்த பெண்கள் கடைசி வரை இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. எனினும் போகப்போக பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கக்கூடிய டாஸ்க்குகளின்போதுதான் அவரவர் சுய விருப்பு - வெறுப்புகள் வெளிப்படும் எனறும் இன்னொருபுறம் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Also Read: “பயமுறுத்தி கத சொல்றாரு.. கேப்டன் ஆகுறாரு.. ஆல் ரவுண்டர் போலயே”..  கலக்கும் ராஜூ பாய்!!!

தொடர்புடைய இணைப்புகள்

Dont watch biggboss5 housemates fun activity goes viral

People looking for online information on Abhinav, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ PriyankaAkshara Reddy will find this news story useful.