பாவனிட்ட நீ இத பண்ணக் கூடாது! பிரியங்காவின் ஆர்டர்! அள்ளு விட்ருச்சே அமீருக்கு! BIGGBOSS5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay TV, BiggBossTamil : பிக்பாஸ் வீட்டுக்குள் இறுதி நிகழ்ச்சியை நோக்கிய டாஸ்குகள் அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

dont talk to pavani oneday biggboss priyanka order to amir
Advertising
>
Advertising

ஃபினாலே

அதாவது இந்த டாஸ்குகள் போட்டியாளர்களின் இறுதி வெற்றியை தீர்மானிக்கும் டாஸ்குகளாக ஆகப்போவதாக பிக்பாஸ் முன்பே அறிவித்திருந்தார். முன்னதாக இந்த போட்டியில் இருந்து சஞ்சீவ், அக்‌ஷரா மற்றும் வருண், தாமரை செல்வி உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர்.

dont talk to pavani oneday biggboss priyanka order to amir

சரத்குமார் எண்ட்ரி

இதனிடையே தாமரை வெளியேறுவதற்கு முன்னர், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகர் சரத்குமார் ஒரு பணப்பெட்டியை அறிமுகப்படுத்தி, அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாயில் தொடங்கி ஏறிக்கொண்டே போகலாம், இதை எடுத்துக்கொண்டு வெளியே செல்பவர்கள் செல்லலாம், ஏனென்றால் யாரேனும் ஒருவர் தான் ஜெயிக்க முடியும் என்று கூறி இருந்தார்.

பணப்பெட்டியுடன் வெளிசென்ற சிபி

இதனைத் தொடர்ந்து இந்த பெட்டியை முதலில் தான் எடுத்து செல்வதாக அமீர் தெரிவித்தார். ஆனால் பின்னர் அவர் பிராங்க் பண்ணியதாக அவரே கூற, சிபி 12 லட்ச ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருநாள் பிக்பாஸாக ஆகும் வாய்ப்பு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு டாஸ்க்காகவே கொடுக்கப்பட்டது.

அமீர் - பாவனி உறவு

இந்த டாஸ்கில் ஒருநாள் பிக்பாஸாக மாறிய பிரியங்கா, முதலில் அனைவரையும் 2 மணி நேரம் தூங்கச் சொல்லி அன்பு கட்டளை போட்டார். இதேபோல் அமீருக்கு பிரியங்கா போட கண்டிஷன் தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கண்டிஷனில் பாவனியும் சம்பந்தப்பட்டிருந்தார். முன்னதாக அமீர் பாவனியிடம் விளையாட்டாக காதலை சொல்லி தினமும் பேசிவந்தார். ஒருநாள் முத்தமும் கொடுத்தார்.

பாவனியை நாமினேட் செய்த அமீர்

ஆனால் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என பாவனி குழம்பியிருந்த நிலையில், அமீர் பாவனியையே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து தன் ஃபோகஸ் அனைத்தும் கேம் மீதும் பிக்பாஸ் வீட்டில் தன் இருப்பை தக்கவைப்பதன் மீதுமே இருக்கப் போவதாக கூறினார். எனினும் இருவருமே இப்போது சகஜமாகவே பேசி சிரித்து நட்புடன் பழகுகின்றனர்.

பாவனிட்ட பேசக்கூடாது!

இந்நிலையில் தான் ஒருநாள் பிக்பாஸான பிரியங்கா, “நீங்கள் இன்று முழுவதும் பாவனியிடம் பேச கூடாது” என சொல்லி கட்டளை போடுகிறார். அதைக்கேட்ட அமீர் ஷாக் ஆகி அப்படியே நிற்கிறார். இதேபோல், பாவனியிடமும் “நீங்கள் அமீரை தொட்டுப் பேசவா கிச்சுகிச்சு மூட்டவோ கூடாது!” என பிரியங்கா கூறுகிறார்.

அமீர் பிரியங்கா பிணைப்பு

விஜய் டிவி கோரியோ கிராபரான அமீர், பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ்க் அணிந்தபடி வந்ததுமே பிரியங்காதான் அமீரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டார். இதேபோல் முதன்முதலில் பிரியங்கா முன்னிலையில்தான் அமீர் பாவனியிடம் விளையாட்டாக தன் எண்ணத்தை கூறினார். அப்போதே பிரியங்கா, ‘முடியலடா சாமி’ என்பது போல் ஜாலியாக கலாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "நீங்க யாரு? விஜய் டிவில ஏன் வேலைக்கு சேந்தீங்க?".. ஒரு நாள் BiggBoss ஆன ராஜூ.. வெச்சு செஞ்ச பிரியங்கா!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dont talk to pavani oneday biggboss priyanka order to amir

People looking for online information on Amir, Amir pavani, Amir pavani kiss, Amir pavani love, Oneday biggboss priyanka, Pavani amir will find this news story useful.