Disney+HotStar Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது டிஸ்னி+ஹட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
போட்டியாளர்கள்
இப்படி டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வனிதா- ஜூலி
அதாவது பிக்பாஸ் சீசன் 1 முதல் சீசன் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக அனிதா - சுரேஷ் சண்டையைத் தொடர்ந்து இப்போது திருடன் போலீஸ் டாஸ்கில் வனிதா- ஜூலி சண்டை என நாளும் நாளும் ஒரு சண்டை உருவெடுத்து வந்தது.
சோசியல் மீடியா முழுவதும் எப்போது விவாதத்தை கிளப்பும் அளவுக்கு போட்டியாளர்கள் எதாவது பேசிக்கொண்டேவும் இருக்கின்றனர். அண்மையில் தான் போட்டியாளர்களுள் தாமரைக்கு மகா நடிகை, அனிதாவுக்கு விஷ பாட்டில், வனிதாவுக்கு நாட்டாமை என ஆளாளுக்கு ஒரு பட்டம் பிக்பாஸ் வீட்டுக்குள் வழங்கப்பட்டது.
24 மணி நேரமும்
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஒரு பாட்டு பாடுங்க
இதனால் அவ்வபோது போட்டியாளர்கள் உட்கார்ந்து பேசுவது, பாடுவது என ஆக்விட்டிகள் அல்லாத நேரத்தில் கூட சண்டைகள் வருகின்றன. ஆம், ஒருபுறம் திக் தோழிகளாகிவிட்ட அனிதா மற்றும் தாமரை இருவரும் சிறையில் தங்களுடைய நேரத்தை கழிக்க, வெளியே அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுஜாவை தாமரை, ஏதேனும் ஒரு பாடலை பாடச் சொல்ல, அவரும் ஒரு பாடலை பாடினார்.
ஐட்டம் பாட்டு..
அதிலும் குறிப்பாக அனிதா கேட்கும்போது, “ஜெயில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஐட்டம் பாடல் இருக்கா?” என கேட்க, அதற்கு சுஜா அனிதாவிடம், “நீங்கள் என்ன சொல்றீங்க?”.. என சொல்ல, அனிதா என்னென்று வினவுகிறார். அப்போது சுஜா “அதான். நீங்கள் சொல்ற அந்த ஒரு வார்த்தை? அந்த பாடலில் இடம் பெறும் அந்த ஆர்டிஸ்ட்டை அப்படி அந்த பெயரால் குறிப்பிட தேவையில்லை.. அப்படி சொல்லாதீங்க. அவங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கு.” கூறுகிறார்.
ஐட்டம் சாங்னு சொல்லாதீங்க..
அப்போது மீண்டும், “சரி ஐட்டம் சாங்க்கு ப்திலா கிளாமர் பாட்டுனு சொல்லலாம்” என சொல்ல, உடனே சுஜா, “ஆம், அப்படித் தான் சமீபத்தில் சமந்தா ஆடியிருந்த, ‘ஓ சொல்றியா மாமா’ பாடலை ஐட்டம் பாடல் என்று சொன்னார்கள், நானும் திரைத்துறையில் இதுபற்றியெல்லாம் கேட்டிருக்கிறேன். விட்டுவிடவில்லை” என்று சொல்கிறார்.
பின்னர் அனிதா சுஜாவிடம், “இப்படிலாம் பேசாதீங்க.. நானும் பெண்களுக்கு எதிரானவள் பல முறை இதே பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்காக குரல் கொடுத்திருக்கேன். நடைமுறை வார்த்தையை பயன்படுத்தினேன் அவ்ளோதான். இதை நீங்க வேற மாதிரி எடுத்துட்டு போகாதீங்க.. ப்ளீஸ் இந்த பேச்சை இதோட விடுங்க” என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.