VIDEO: "ROOM-ல தனியா விடாதீங்க.. நாம முழிச்சக்கணும்.. எனக்கும் 2 குழந்தைங்க .." - கார்த்தி அனல் பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சமூகம் சார்ந்த நிறைய கருத்துகளை அண்மைக் காலமாக பேசி வருகின்றனர்.

Advertising
>
Advertising

திரைத்துறையில் நடிகர் சிவகுமாரின் குடும்பம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்ந்த சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சிவக்குமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி பல கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் பேசும்போது, “போதைப் பழக்கம் என்கிற விஷயம் பள்ளி வரை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தண்ணி அடிப்பதை காட்டிலும் தம் அடிப்பதை காட்டிலும் போதை பொருள் உட்கொள்வதை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அதை உட்கொண்டுவிட்டு அமைதியாக இருப்பவராகவும் இருக்கிறார். அப்படி போதைப்பொருள் எடுத்துக் கொள்வது யாருக்கும் தெரியப்போவதில்லை.

பெட்டிக்கடை அண்ணாச்சிகள் பலரும் அது போதைப் பொருள் என்று தெரியாமலே விற்கின்றனர். மாணவர்களும் அவர்களுக்கு இருக்கும் ஏதேதோ பல பிரச்சனைகளுக்கு இதை தீர்வாக நினைத்து நாடி உட்கொள்கின்றனர். அது கொஞ்ச நேரம் வேறு உலகத்துக்கு கூட்டிச் செல்கிறது. ஆனாலும் திரும்பவும் அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து அந்த பிரச்சனையை சந்தித்துதான் ஆகவேண்டும். போதைப்பொருள் உட்கொள்வதால் பிரச்சனை முடியப் போவதில்லை.

குறிப்பாக ஒரு போனை எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தைகள் ரூமிற்கு சென்று தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அப்படி தனியாக விடாதீர்கள் என்கிறேன் நான்.. இதுபற்றி தனியாக பேசவேண்டும், ஆனால் இந்த மேடையில் இங்கு தொடங்கி வைக்க வேண்டும் என நினைத்தேன். கிராமப்புற மாணவர்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களை நகரத்துக்கு அழைத்துவருவது, உங்கள் சிந்தனைகள், தன்னம்பிக்கைகளை மேம்படுத்தி வளர்த்துக்கொண்டு, உங்கள் வைராக்கியம், வெறியுடன் நினைத்ததை சாதிக்க வேண்டும். உங்களை சுற்றி நிகழும் எதிர்மறைகளை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். உங்கள் கனவு நனவாகும்” என்று பேசி இருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசி இருக்கிற பல விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.

VIDEO: "ROOM-ல தனியா விடாதீங்க.. நாம முழிச்சக்கணும்.. எனக்கும் 2 குழந்தைங்க .." - கார்த்தி அனல் பேச்சு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dont let kids alone in room actor Karthi Emotional speech video

People looking for online information on Karthi, Sivakumar, Suriya will find this news story useful.