இங்கேயும் டார்ச்சர் பண்ணாதீங்க ப்ளீஸ்! சிவகார்த்திகேயனின் வைரலாகும் பதில்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S.J சூர்யா சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று (05.08.2021) பொள்ளாச்சியில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இட்ட பதிவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.

நடிகர் பால சரவணன் புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி நடிகர் சிவகார்த்திக்கேயனை டேக் செய்துள்ளார். 

இதற்கு சிவகார்த்திகேயன், இங்கையும் வந்து டார்ச்சர் பண்ணாதீங்க ப்ரோ என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Dont disturb me actor sivakarthikeyan funny reply

People looking for online information on Bala Saravanan, Don, Sivakarthikeyan will find this news story useful.