விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் எண்ணிலடங்காதவர்களாக உள்ளனர்.

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2வது சீசன் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் நிகழ்ச்சி நாளை தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடையே சென்று சேர்ந்த பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி. பாடகியாக விஜய் டிவியின் மூலம் அறியப்பட்ட சிவாங்கி, சிறந்த நடிகையாகவும், பொழுதுபோக்காளராகவும் மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியுள்ளர்.
இதேபோல், விஜய் டிவிடில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பிரபலமானதுடன் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நேஹா மேனன். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் நேஹாவை சிவாங்கியுடன் இணைத்து சில ரசிகர்கள் பதிவுகள் போட, சில ரசிகர்கள் இருவரையும் கம்பேர் பண்ண வேண்டாம் என கூறி கமெண்டுகளை பதிவிட்டு வந்துள்ளனர்.
இதுபற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட பாக்கியலட்சுமி நேஹா, “சிவாங்கியும் என்னையும் சேர்த்து வெச்சு ஸ்டோரி போட்டிருந்தாங்க. அது ரசிகர்களின் அன்புதான். நிறைய பேர் சிவாங்கியுடன் நேஹாவை கம்பேர் பண்ணாதீங்க என கமெண்ட் கூறினர். தயவு செய்து கம்பேர் பண்ணாதீங்க. அதையே தான் நானும் கூறுகிறேன்.
சிவாங்கி வேற லெவல் அமேசிங்.. நானே சிவாங்கியின் பெரிய ரசிகை தான். சில் பண்ணுங்க. கம்பேர் பண்ண வேண்டாம். நோ டென்ஷன். அன்பை பகிர்வோம்!” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
ALSO READ: போட்றா வெடிய!!... சூர்யா வெற்றிமாறன் இணையும் VaadiVaasal .. வெளியான மாஸ் அப்டேட்!