லைகா சுபாஷ்கரனோடு ‘டான்’ TEAM… 25 ஆவது நாள் கொண்டாட்டம்… வைரல் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்று 25 ஆவது நாளைக் கடந்துள்ளது.

Advertising
>
Advertising

டான்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

டான் வெற்றி…

‘டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  இப்போதும் சில திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

டான் 25 ஆவது நாள் கொண்டாட்டம்….

இந்நிலையில் இன்று டான் திரைப்படம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படத்தின் தயாரிப்பாளரான லைகா சுபாஷ்கரனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் “25 புகழ்மிக்க நாட்கள். மெஹா பிளாக்பஸ்டர்… ரசிகர்களுக்கு நன்றி. உங்களின் அன்பும் ஆதரவும்தான் எங்களை இயக்குகிறது” என்று நன்றி தெரிவித்துள்ளனர். முதல்முறையாக டான் படக்குழுவினரோடு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Don Team with producer Lyca subashkaran viral pic

People looking for online information on Lyca, Sivakarthikeyan, Subashkaran will find this news story useful.