டான் படத்தின் தெலுங்கு பதிப்பின் புதிய டைட்டில் அறிவிக்கப்பட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
Also Read | கமலின் 'விக்ரம்' பட ஆடியோ & டிரைலர் Lanuch எங்கே?.. எப்போது.? - Latest தகவல்!
DON நட்சத்திரப் பட்டாளம்…
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ரிலீஸும் ப்ரமோஷனும்…
இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் படத்துக்கான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் டான் படத்தின் டிரைலர் மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின்(ரெட் ஜெய்ண்ட்) உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசியது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது.
டான் படத்தின் தெலுங்கு வெர்ஷன் டைட்டில்….
இந்நிலையில் டான் படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் (மே 13) தெலுங்கு வெர்ஷனிலிலும் ரிலீஸாகிறது. மேலும் தெலுங்கில் படத்துக்கு ‘காலேஜ் டான்’ என்ற பெயரை வைக்கப்பட்டுள்ளது. காலேஜ் டான் படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
முன்னதாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. டான் படத்தின் தெலுங்கு வெர்ஷன் டிரைலரும் தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8