"அவங்க வெளியேற நிறைய வாய்ப்பு இருக்கு"... என்ன இப்படி சொல்லிட்டாங்க.. ஷாக்கான ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் நடந்தது. அதில் பலர் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள்  செய்த காலை தாங்களே கட் செய்தனர். ஆனால் சிலர் விடாப்பிடியாக விளையாட்டை சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் புதிய சூழ்ச்சியை தொடுக்க. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் காணமுடிகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான Unseen  வீடியோவில் அர்ச்சனா, ஷிவானி மற்றும் சனம் மூன்று பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது "இன்னும் 40 நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் பாதிக்குமேல் போட்டியாளர்கள் இங்கேயே இருக்கின்றனர்" என்பது போல் கேட்க, அர்ச்சனா அடுத்தடுத்த  வாரங்களில் யார் யார் வெளியேறுவார் என்பதுபோல தனது கணிப்பை கூறுகிறார்.

மேலும் இறுதியாக யார் இருப்பார் என்று கூறும்பொழுது "பாலா, ரியோ, ஆஜீத் , ஷிவானி, ரம்யா" போன்றோரின் பெயர்களைக் கூறுகிறார். ஆனாலும் "ரியோ சில சமயங்களில் Emotional Imbalance ஆக நடந்து கொள்வதால் கொஞ்சம் சந்தேகம்தான். ரம்யா கூட வெளியேற வாய்ப்பு இருக்கிறது. பிற மொழி பிக்பாஸ்  நிகழ்ச்சிகளில் தன்னிச்சையாக செயல்படும் போட்டியாளர்கள் இறுதியில் வெளியேறி விடுவார்கள்" என்பது போல் அதற்கு காரணம் கூறியுள்ளார்.

"அவங்க வெளியேற நிறைய வாய்ப்பு இருக்கு"... என்ன இப்படி சொல்லிட்டாங்க.. ஷாக்கான ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Does this contestant has high chance to get eliminatedஅவங்க வெளியேற நிறைய வாய்ப்பு

People looking for online information on Archana, Biggboss4tamil will find this news story useful.