நம்பவே முடியல! டாக்டர் படத்துல மெட்ரோ ரயில், வில்லன் இடம் எல்லாம் சினிமா செட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

doctor movie train set art director share unseen images

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

doctor movie train set art director share unseen images

இந்த டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம்.

முக்கியமாக முதல் பாதியில் வரும் மெட்ரோ ரயில் சண்டைக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுகிறது. இந்நிலையில் படத்தின் கலை இயக்குனர் கிரண் டிவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 

இந்த படத்தில் வரும் மெட்ரோ ரயில், வில்லனின் இடம், ஹீரோயின் வீடு ஆகியவை செட் போட்டு படமாக்கி உள்ளனர். அந்த புகைப்படங்களையும், படத்தின் BTS புகைப்படங்களையும் கிரண் பகிர்ந்துள்ளார். ஒளிப்பதிவாளரிடமும் கிரண் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில் இதுபோல ஒரு பிரேம் வர என்னிடம் எத்தனை நிறங்கள் கேட்டீங்க என எழுதியுள்ளார். இயக்குனர் நெல்சனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Doctor movie train set art director share unseen images

People looking for online information on Nelson, Sivakarthikeyan will find this news story useful.