தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகுதா? இந்த மூன்று படங்கள்! உண்மை என்ன? செம ENTERTAINMENT இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.

70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ளார், முரளி ஜி ஓளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் ஜீ5 ஒடிடியில் செப்டம்பர் 10 அன்று வெளியானது. கார்த்திக் யோகி இயக்கிய இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சந்தானத்துடன் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், நிழல்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். டைம் டிராவல் காமெடியாக இந்தப் படம் அமைந்தது. இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, இளவரசு, ரெட்டின் கிங்க்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று திரைப்படங்களும் வரும் தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று அந்தந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Doctor dikkilona sarpatta world television premiere on Diwali

People looking for online information on Arya, Dikkilona, Doctor, Santhanam, Sarpatta Parambarai, Sivakarthikeyan will find this news story useful.