"ஜெயிக்கனும்னு தெரியாமலயே வந்திருக்கியா?!".. சஞ்சீவ், பிரியங்காவின் கேள்வி.. தாமரையின் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை கிட்டத்தட்ட 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். வார இறுதியில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன் தற்போது போட்டியாளர்களை தனித்தனியே அழைத்து கன்ஃபெஷன் ரூமில் உட்காரவைத்து அவர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

Advertising
>
Advertising

கிராண்ட் ஃபினாலே ரேஸ்

இந்த ஆலோசனைகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் தங்களை கிராண்ட் ஃபினாலே என்று சொல்லப்படும் இறுதிப்போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ள உதவும் என்பது அனைவரின் எண்ணம். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதால், அனைவரும் அதை நோக்கி தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தி, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் தானே நாமினேட் செய்வதாக கூறி அதிர வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரின் உறவினர்களும், நெருக்கமானவர்களும் வந்து சென்றனர். அவர்களைப் பற்றி வெளி உலகத்தில் இருக்கும் பார்வைகளை தங்கள் கருத்துக்களுடன் சேர்த்து முன்வைத்தனர். இதுவும் போட்டியாளர்களுக்கு ஒரு வகையில் தங்களை இறுதிப்போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தாமரை - பிரியங்கா சண்டைகள்

இதனிடையே தற்போது சஞ்சீவ், பிரியங்கா, தாமரையின் பேச்சு விவாதத்தை நோக்கி சென்றிருக்கிறது.  முன்னதாக பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் இடையே மூளும் சண்டை என்பது பிக்பாஸ் வீட்டுக்குள் மிகப்பெரிய பிரளயமாகவே இருக்கும். பின்னர் தாமரையின் கணவர் மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர்.

அப்போது தாமரையின் மகன் பிரியங்காவை பார்த்து, ஏன் என் அம்மா மற்றவர்களுடன் சண்டை போடும் போது நீங்கள் குறுக்கே வருகிறீர்கள் என்று நேரடியாகவே கேட்டு விட்டார். அதற்கு பிரியங்கா, “இனிமேல் வரமாட்டேன்பா.. உங்கள் அம்மா சண்டை போடும் பொழுது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும் .. தனால் குறுக்கே வந்து பேசினேன் தம்பி!” என்று கூறினார்.

ஜெயிப்பது என்றால் என்னவென்றே தெரியாதா?

இந்த நிலையில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் சகஜமாக பேசிக் கொள்ள தொடங்கியிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தாமரையிடம் பிரியங்கா, “நீ  பிக்பாஸ் வீட்டுக்குள் ஜெயிக்க வேண்டுமா?” என்று கேட்கிறார். அதற்கு தாமரை யார் ஜெயித்தாலும் சந்தோஷம்தான் என்கிறார்.

அப்போது குறுக்கே வந்து பேசும் சஞ்சீவ், “உங்கள் மாமியார் பிக்பாஸ் பார்க்கிறார் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.. ஆனால் உங்களுக்கு ஜெயிப்பது என்றால் என்னவென்றே தெரியாது என்பதுபோல் பேசுவீர்கள்.. இந்த மாதிரி நீங்கள் சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

இங்கே உட்கார்ந்து பேசுங்க! - சஞ்சீவிடம் தாமரை.

அப்போது அவரை அழைக்கும் தாமரை, “வாங்க இங்கே உட்கார்ந்து பேசுங்க!” என்று கூச்சலிடுகிறார். மேலும் எதையாவது சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருக்க வேண்டாம் வந்து உட்கார்ந்து பேசுங்கள் என்று ஆவேசமாக சஞ்சீவை பார்த்து தாமரை கத்துகிறார். 

அப்போது மீண்டும் அருகே வந்த சஞ்சீவ், தாமரையிடம், “உங்களுக்கு ஜெயிக்கணும் என்று இல்லையா?” என்று கேட்க, பிரியங்காவும், “யார் ஜெயித்தாலும் சந்தோஷம் என்று சொல்ற.. உனக்கு ஜெயிக்க வேண்டும் என்று இல்லையா?” என்று கேட்கிறார்.

உனக்கு ஜெயிக்கணுமா..?

பிரியங்காவுக்கு பதில் அளித்த தாமரை, “யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்! மக்கள் என்னை ஜெயிக்க வைத்தாலும் எனக்கு சந்தோஷம்தான்!” என்று சொல்கிறார். பின்னர் இறுதியாகவும் உறுதியாகவும் பிரியங்கா, “உனக்கு ஜெயிக்கணுமா?” என்று ஒரே கேள்வியை கேட்கிறார்.

அதற்கு ஒரே பதிலாக தாமரை, “எனக்கு ஜெயிக்க வேண்டாம்” என்று பதில் சொல்கிறார். இப்படியாக இந்த புரோமோ முடிகிறது. இவர்களுக்குள் என்ன நடந்தது? முழுமையாக எந்த கோணங்களில் பேசிக்கொண்டார்கள்? எப்படியெல்லாம் இந்த விஷயம் அடுத்து போகப்போகிறது என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்!

Do you want win thamarai answer for sanjeev priyanka biggboss5

People looking for online information on Biggboss5 tamil, Biggbosstamil, BiggBossTamil5, Thamarai priyanka argument, Thamarai sanjeev, Thamarai sanjeev argument, Thamarai Selvi, Thamarai Selvi nadagam will find this news story useful.