தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. அவர் பொதுவாகவே மிகவும் அமைதியானவர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சில வித்தியாசமான கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

அப்படியே ரசிகர் ஒருவர் உங்களுக்கு ராஷ்மிகா பிடிக்குமா அல்லது சமந்தா பிடிக்குமா என்று தர்மசங்கடமாக கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு "எனக்கு இருவரையும் பிடிக்கும். இருவரும் மிகவும் அற்புதமான நடிகர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் கூறிய அவர் எனது மகன் கௌதம் படத்தில் ஹீரோவாக நடிக்க விரும்புகிறார். காலம் தான் அதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது தந்தையின் பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில் தனது புதிய படமான 'சர்க்காரு வாரி பட்டா' படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதுபற்றி கூறும்போது "இது அழுத்தமான மெசேஜ் உடன் கூடிய பொழுதுபோக்கு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.