பிகினி உடை.. கடலில் குளியல்.. கடற்கன்னியாய் மாறிய 'பேச்சுலர்' திவ்யபாரதி.. லேட்டஸ்ட் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி இருந்த 'Bachelor' திரைப்படத்தில் நாயகியாக நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் திவ்யபாரதி.

Advertising
>
Advertising

முன்னதாக, மாடலாக இருந்த திவ்யபாரதி, நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய புகைப்படங்களினால் ரசிகர்களை அதிகம் கவர்ந்து எடுத்த திவ்யபாரதி, தற்போது திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்கள்

பேச்சிலர் படத்தை அடுத்து, முகேன் ராவுடன் இணைந்து, 'மதில் மேல் காதல்' என்னும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதே போல, மலையாளத்தில் வெளியாகி, பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த 'Ishq' படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கதிருடன் இணைந்து நடித்து வருகிறார் திவ்யபாரதி.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார் நடிகை திவ்யபாரதி. இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

மாலத்தீவில் ஹாலிடே

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்றுள்ள நடிகை திவ்யபாரதி, அங்கு தான் கழித்து வரும் நேரத்தினை இன்ஸ்டாவில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பகிர்ந்து வருகிறார். தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருக்கும் அவர், பிகினி மற்றும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

கடலில் குளியல்

அதிலும் குறிப்பாக, பிகினி உடையில் கடலில் இருந்து எழுந்து கரை அருகே நடந்து செல்லும் திவ்யபாரதியின் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், ஹார்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். திவ்யபாரதியின் மற்ற இன்ஸ்டாகிராம் பதிவுகள் போல, இந்த வீடியோவும் அதிகம் வைரலாகி வருகிறது.

திவ்யபாரதியின் மாலத்தீவு வீடியோ :

https://youtube.com/shorts/5VSV68yYVsE?feature=share

தொடர்புடைய இணைப்புகள்

Divyabharathi new bikini video in maldives viral among fans

People looking for online information on Bachelor, Beach Video, Divya Bharathi, Maldives, Photos will find this news story useful.