Also Read | அமுதுவுக்கு குயின்சி வச்ச Nick Name.. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம தவிச்ச விக்ரமன்😂..!
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.
அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டு போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வலம்வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தொகுப்பாளர் DD பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவரை போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்றனர். அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளரிடமும் DD பேசியிருக்கிறார். விக்ரமனிடம் டட பேசுகையில், கேள்வி ஒன்றை விக்ரமன் முன்வைக்கிறார்.
இதுபற்றி விக்ரமன்,"முதல் நாளே என்னை ஒரு இன்ட்ரெஸ்டிங்கான நபர் இல்லைன்னு சொன்னாங்க. அதை நான் எதிர்பார்த்தேன். இப்போ என்னை பத்தி உங்களுடைய அபிப்ராயம் என்ன?" என கேட்கிறார். இதற்கு பதில் அளிக்கும் DD,"ஒரு நல்ல விஷயத்தை சொல்ல நெறய பேர் இருப்பாங்க. ஆனா அதையே திரும்ப திரும்ப ஒருத்தர் சொல்லுறது சிரமம். பொதுவா நம்ம படிச்ச விஷயங்கள், பழகின விஷயங்கள் வேற மாதிரி இருக்கும். உதாரணமா பொண்ணா லட்சணமா போய் பாத்திரம் கழுவு-னு அவங்க சொல்லும்போது ஏன்பா இன்னும் இப்படி பேசுறீங்கன்னு நீங்க கேட்டிங்க. ஆனா அந்த விஷயம் தானே இன்னும் வாயில வருது. ஏன்னா பல வருடங்களா ஒரு மனநிலைல நாம வாழ்ந்திருக்கோம். நானுமே சின்ன வயசுல அப்படிதான் இருந்திருக்கேன். அப்புறம் படிச்ச பிறகு இப்படி இருக்க வேண்டாமே அப்படின்னு தோணுச்சு" என்கிறார்
தொடர்ந்து பேசிய DD,"பொதுவா ஒரு மேடையில ஒருத்தவங்க ஆடையை பத்தி கமெண்ட் பண்ணா நெறய பேரு கை தட்டுவாங்க. ஆனா, அப்படி ஒரு கை தட்டு எல்லாம் தேவை இல்லன்னு நீங்க நினைக்கிறீங்க. வேற எதோ பேசி ஒரு பத்து பேர் கைதட்டுனா போதும்னு நினைக்கிறீங்க. அதுக்கே ஒரு தைரியம் வேணும். ஒரு விஷயத்தை தப்புன்னு சுட்டிக்காட்டும்போது கூட இருக்கவங்க நம்மை பாராட்டுவாங்கன்னு எதிர்பார்க்க கூடாது. இது உங்களுக்கு நல்லாவே தெரியும்" என்கிறார்.
Also Read | சர்ப்ரைஸ் கொடுத்த சீரியல் பிரபலங்கள்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு.. இவங்களா..!