ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | அமுதுவுக்கு குயின்சி வச்ச Nick Name.. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம தவிச்ச விக்ரமன்😂..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.
அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டு போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வலம்வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தொகுப்பாளர் DD பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவரை போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்றனர். அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளரிடமும் DD பேசியிருக்கிறார். ஷிவின் பற்றி DD பேசுகையில், அவருடைய கடினமான வாழ்க்கை பயணம் குறித்து உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
அப்போது,"பொதுவா ஆண்கள் எமோஷன் ஒரு மாதிரி இருக்கும். அப்பா ஒரு மாதிரி இருப்பாங்க. அண்ணன் ஒரு மாதிரி இருப்பாங்க. அதே மாதிரி பெண்கள்-ல அம்மா ஒருமாதிரி நடந்துப்பாங்க. பாட்டி ஒருமாதிரி பிஹேவ் பண்ணுவாங்க. இதை நாம் பார்த்து வளர்ந்ததால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவர்களை அவங்க எமோஷனை நாம புரிஞ்சுக்க போதுமான விழிப்புணர்வு நம்மகிட்ட இல்ல. அவங்ககிட்டயும் இல்ல. ஒரு சின்ன விஷயம் நடந்தா கூட நமக்கு வலிக்குது. நம்மளைவிட பல மடங்கு ஹார்மோன் சிக்கல்களோட இருக்க அவங்க எவ்வளவு வலியை தாங்கி இருப்பாங்க" என்கிறார். அப்போது போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி ஷிவினை உற்சாகப்படுத்துகின்றனர்.
தொடர்ந்து ஷிவினிடம் பேசும் DD,"இன்னைக்கு இப்படி ஒரு அழகா உங்களை பார்க்குறோம். ஆனா உங்களோட வாழ்க்கை பயணம் அவ்வளவு எளிதா இருக்கவில்லை. சில கசப்பான அனுபவங்கள் வந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு எப்போதும் சிரிச்ச முகத்தோட இருக்கீங்க. இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்? தமிழ் பேசுற அத்தனை பேரும் ஷிவின் மேல அன்பா இருக்காங்க" என்கிறார். அப்போது கண் கலங்கியபடி ஷிவின் நன்றி தெரிவிக்க போட்டியாளர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.
Also Read | "இப்படி பேசுறதுக்கே ஒரு தைரியம் வேணும்".. விக்ரமனை பாராட்டிய DD.. நெகிழ்ச்சி பின்னணி..!