“க்ரீன் இலை.. நயன்தாரா தலை”.. அடிச்சு பறக்கவிடும் வைரல் O2 பட டிரெய்லர் கமெண்ட்ரி.. !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”.

Advertising
>
Advertising

Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்.. பிரபல OTT-ல எப்போ ரிலீஸ்?

இந்த படத்தில் அம்மாவாக வரும் நயன்தாரா, தன் 8 வயது மகனுடன் கோவையில் இருந்து கொச்சின் போகும்போது ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ள, பேருந்தில் பயணிகள் அனைவரும் மாட்டிக்கொண்டு ஆக்ஸிஜன் இல்லாமல் தவிக்கின்றனர்.

நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் நயன்தாராவின் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் இருக்கும் சகபயணிகள் குறிவைக்க, அவர்களிடம் இருந்து தன் மகனை ஒரு தாய் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”.

தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். 

டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஜூன் 17-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் இந்த திரைப்படத்தின் டிரைலர் பற்றிய வேற லெவல் கமெண்ட்ரி, டிஸ்னி+ஹாய் ஸ்டாரில் தற்போது வெளியாகியுள்ளது. அதில், டிரெய்லரில் வரும் மொத்த காட்சிகளையும் ரத்தினச் சுருக்கமாக ரைமிங் மற்றும் டைமிங்குடன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார்கள்.  டிஸ்னி+ஹாட் ஸ்டார் தமிழில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also Read | “இவன் படம்லாம் நடிக்கிறானா..? ஹீரோயின் நயன்தாரான்னுவான் போல” - ரித்து meets வீரா.. செம ப்ரோமோ

தொடர்புடைய இணைப்புகள்

Disney Plus hotstar trailer commentry O2 Nayanthara Rythvik

People looking for online information on Dream Warrior Pictures, Nayanthara, O2 Movie, Rithu, Rythvik, SR Prabhakaran, SR Prabhu will find this news story useful.