சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் சூப்பர் ஹிட் 'திருச்சிற்றம்பலம்'.. எப்போ? எதுல? முழு தகவல்

நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

மோஷன் போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக தோன்றி இருந்தார்.  DSPயின் பின்னணி இசையும் விஷூவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்தது.  "வலிமை மிகு வீரம்" எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்தது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார்.  இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.  இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை திஷா பட்டாணி இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா பட்டாணி பகிர்ந்துள்ளார்.

கோவாவில் 250 பவுன்சர்களுடன் சூர்யா சண்டையிடும் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Also Read | புது கெட்-அப்பில் உலகநாயகன்.. கமலை சந்தித்த பிரபல நடிகர் & இயக்குனர்! வைரல் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Disha Patani Joined the Set of Suriya 42 Movie

People looking for online information on Disha Patani, Siruthai Siva, Suriya, Suriya 42 Movie will find this news story useful.