THE LEGEND படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டியதா?.. இயக்குனர்கள் JD & JERRY EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertising
>
Advertising

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என  கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ‘தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின.

விரைவில் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை படத்தின் இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி பேட்டி அளித்துள்ளனர். குறிப்பாக, "இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க முதலில் நீங்கள் கேட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. அது உண்மையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க கேட்கவில்லை. வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தோம்" என இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி பதில் அளித்துள்ளனர்.

THE LEGEND படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டியதா?.. இயக்குனர்கள் JD & JERRY EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Directors JD and Jerry about actress Nayanthara in The Legend

People looking for online information on Jd jerry, Nayanthara, The legend will find this news story useful.