பிரபல இயக்குநர் விஜய்க்கும், மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இயக்குநர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடிக்க, அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.