டிவிட்டர் பயோவில் AK62 படத்தின் பெயரை நீக்கிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் ஸ்கிரீன் ஷாட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் AK62 படத்தின் பெயரை  தனது டிவிட்டர் பயோவில் இருந்து  இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களை கடந்து ஓடி வருகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

துணிவு படத்தின் இமாலய வெற்றியை  அடுத்து நடிகர் அஜித்தின் அடுத்த 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லண்டனில் இருந்த  இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படத்தின் அறிவிப்பு வந்த போது தான் பதிவிட்ட ட்வீட், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் ஆகியவற்றை மீண்டும் லைக் செய்து இருந்தார். 

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து AK62 என்ற பெயரை நீக்கம் செய்துள்ளார். AK62 என்பதனை நீக்கி Wikki6 என சேர்த்துள்ளார்.

இது தொடர்பான விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்க ஸ்கிரீன் ஷாட் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Director Vignesh Shivan has removed AK62 from his Twitter Bio

People looking for online information on Ajith Kumar, AK62, Vignesh shivan, Wikki will find this news story useful.