"படத்தை ஆராய்ச்சி பண்ணாம, பார்த்து ரசிங்க" - காப்பான் குறித்து பிரபல இயக்குநர் வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் கடந்த செப்.20ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படம்  ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில்  எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

அதில், ‘இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விமர்சகர்கள் தங்கள் புத்திசாலி தனத்தைக் காட்டவே நினைக்கிறார்கள். படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம் காப்பான்' அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படம் சொல்லும் தேசபக்தி தருணங்களை கண்டு ரசியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Vignesh Shivan Criticizes Reviewers for Kaappaan.

People looking for online information on K. V. Anand, Kaappaan, Lyca Productions, Suriya, Vignesh shivan will find this news story useful.