இயக்குநர் வெற்றிமாறனின் ரீசன்ட் போட்டோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கலக்கி வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல், சூரி நடிக்கும் படம், தனுஷ் நடிப்பில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் யுவன்ஷங்கர ராஜா '' I am a தமிழ் பேசும் Indian'' என்கிற வாசகம் தாங்கிய டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இது இணையத்தில் செம வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது வெற்றிமாறனும் இதே டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. அண்மையில், இயக்குநர் வெற்றிமாறன், தனக்கு ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால் டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.