வெற்றிமாறன் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறனின் கதை,வசனம், திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதுப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும், இரண்டாம் பார்வை போஸ்டரும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
![director vetrimaran join with telugu music director director vetrimaran join with telugu music director](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-vetrimaran-join-with-telugu-music-director-new-home-mob-index.jpg)
இந்த படத்தில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தமிழ்வேல் எனும் இளைஞராக ராகவாலாரன்ஸ் நடிக்கிறார். வேலைக்காக மலேசியா-சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகள் படும் இன்னல்களை இந்தப்படம் பேசும் என அவதானிக்கப்படுகிறது.
இந்த படத்தை எதிர் நீச்சல், கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
இந்த வருட இறுதியில் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது. பிறகு மதுரை, மேலூர், சென்னை என படப்பிடிப்பு இந்தியா முழுவதும் நீள்கிறது.
இந்த படத்திற்க்கு இசை அமைப்பாளராக பிரபல தெலுங்கு பட இசை அமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா - 3 படத்திற்க்கு தமன் தான் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன் தற்போது ஆர்யா விஷால் நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்திற்கு இசை அமைத்துக்கொண்டு இருக்கிறார்.
முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய தெலுங்கு படத்திற்க்கும் தமன் தான் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.