சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. கதை நடக்கும் காலக்கட்டம் குறித்து வெற்றிமாறன் EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: "இது ஒரு படிப்பினை.. இதே கருத்தை நான் பேசியிருக்கேன்" - சர்தார் படம் பற்றி சீமான்!

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ  சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளார். அதில் வாடிவாசல் படத்தின் கதைக்களம் நடக்கும் காலக்கட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். "வாடிவாசல் படத்தின் கதைக்களம் 1960 களின் முற்பகுதி மற்றும் பிற்பகுதியில் நடக்கும் என்றும், பரபரப்பான அரசியல் சூழல் அப்போது தமிழகத்தில் இருந்த காலக்கட்டம்" என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Also Read | தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா.. குழந்தையின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ‌வாழ்த்து!

சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. கதை நடக்கும் காலக்கட்டம் குறித்து வெற்றிமாறன் EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Vetrimaaran VaadiVasal Exclusive Update Regarding Story Timeline

People looking for online information on Suriya, Vaadivasal, VaadiVasal Exclusive Update, Vetrimaaran will find this news story useful.