இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபல BIKE! விலை எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல இயக்குனர் வெற்றிமாறன் விலையுயர்ந்த உலக அள்வில் பிரபலமான சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

உள்ளாடை அணியாமல் பொது இடத்தில் நடமாடிய உலக அழகி.. சர்ச்சையான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ப்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தயாரிப்பாளராகவும் காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 5 முறை தேசியவிருதை வாங்கியவர்.

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். விடுதலைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெற்றிமாறன், தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே. 

விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, கடலூர் பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் பாக்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் புதிய BMW R NineT Scrambler பைக்கை வாங்கியுள்ளார். KUN BMW Motorrad நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை 19 லட்சம் ஆகும். 17 லிட்டர் பெட்ரோல் அளவு கோண்ட பெட்ரோல் டேங்க் உடன், 1170 சிசி இஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்ஸ் மூலம் இஞ்சின் காற்றின் மூலம் குளிர்விக்கும் வசதி கொண்டது. 

223 கிலோ எடை கொண்ட இந்த பைக் 3.5 செகண்டில் 100 கிலோ மீட்டரை எட்டும். 3 வருட  வாரண்டி உடைய இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும்.

வலிமை படம் ரிலீசாவதற்கு முன் தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Director Vetrimaaran Buys BMW R Nine T Scrambler Bike

People looking for online information on BMW Bike, BMW R Nine T Scrambler, Vaadivaasal, Vetrimaaran, Viduthalai will find this news story useful.