தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
Images are subject to © copyright to their respective owners.
‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில் வெற்றி மாறன் உரை ஆற்றினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், "நடிகர் எம்.ஜி.ஆர் அளவுக்கு எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என்று சொல்வார்கள். நாம கதாநாயகர்களையும் அவர்களின் பிம்பங்களையும் கொண்டாடுபவர்கள். இன்றைக்கு அது அப்பட்டமாக தெரிகிறது. அது மன வருத்தத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கு. ரொம்ப நாளாக எங்க சொல்லலாம் என்று யோசித்து இருந்தேன். அதை இங்கே சொல்கிறேன்.
நடிகர்களை தலைவர் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை உண்டு பண்ணும். எனக்கு அதில் உடன்பாடில்லை. அதை பண்ணாமல் இருக்கலாம். முன்னாடி இருந்தவர்கள் அரசியலோடு சம்பந்தப்பட்டு இருந்தார்கள். அவர்களைத் தலைவர் என்று கூப்பிடுவது ஓகேவா இருந்தது. இன்றைக்கு நடிகர்களை அப்படி கூப்பிடுவது நெருடலாக இருக்கிறது" என வெற்றிமாறன் பதில் அளித்தார்.