ரொம்ப போர் அடிக்குதா...டோண்ட் வொரி குட்டீஸ்! போட்டி அறிவித்த இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு ஆல்பம், வெயில் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் தற்போது குழந்தைகளுக்கான ஓவிய போட்டியினை வரும் ஞாயிற்று கிழமை நடத்தவுள்ளார்.

இவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்“ நண்பர்களே! தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம்?

அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப் பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து  என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com)  அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு : 22ம்தேதி காலை 10 மணி  முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு.  ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம். 

தலைப்பு : கொரோனோவை வெல்வோம்

இயக்குனர் வசந்தபாலன்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

போட்டி அறிவித்த இயக்குநர் வசந்தபாலன் |Director vasanthabalan competition

People looking for online information on Corona, G Vasanthabalan will find this news story useful.