துணிவு & வாரிசு .. இரண்டு படங்கள் குறித்தும் ‘வாரிசு’ இயக்குனர் வம்சி வைரல் பேச்சு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இப்படி பேசுறதுக்கே ஒரு தைரியம் வேணும்".. விக்ரமனை பாராட்டிய DD.. நெகிழ்ச்சி பின்னணி..!

11 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார்.

மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார்.

மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிறகு இயக்குனர் வம்சி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது துணிவு & வாரிசு படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வம்சி, "இரண்டு படங்களும் நல்லா ஓடிட்டு இருக்கு. அதான் வேணும்." என வம்சி பதில் அளித்தார்.

Also Read | Vintage விஜய் சேதுபதி.. 2009-ல் VJS-க்கு போட்டோ ஷூட் நடத்திய அல்போன்ஸ் புத்திரன்.. வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Director Vamsi about Thunivu Varisu Reception chennai Pressmeet

People looking for online information on Director Vamsi, Thunivu, Varisu, Vijay will find this news story useful.