கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (29.10.2021) அன்று உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
![director tweet about biopic of late actor appu puneet rajkumar director tweet about biopic of late actor appu puneet rajkumar](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-tweet-about-biopic-of-late-actor-appu-puneet-rajkumar-new-home-mob-index-1.jpeg)
திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கிய் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், நடிகர் சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர்.4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர்.
கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்டார் புனித், இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். இந்நிலையில் மறைந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என புனித் ராஜ்குமாரின் ரசிகர் ஒருவர் இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராமிடம் ட்விட்டர் வழியாக கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் சந்தோஷ், “புனித்தின் வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்க முயற்சி செய்வேன்” என கூறியுள்ளார்.