"இசை வாணி, கலை வாணி".. வாணி ஜெயராம் மறைவுக்கு இயக்குனர் டி‌. ராஜேந்தர் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இசையமைப்பாளர் & நடிகர் டி‌. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising


சென்னை Haddows Road நுங்கம்பாக்கம் இல்லத்தில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் இன்று காலமானார்.

இசை  உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திய வாணி ஜெயராமின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது. வாணி ஜெயராமனுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் டி‌‌. ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் எனும் பாடல் மூலம் தமிழ் திரை உலகத்தையே மயங்க வைத்தவர், திரும்பி பார்க்க வைத்தவர், பலமுறை இந்தப் பாடலை விரும்பி கேட்க வைத்தவர்.

இசை உலகத்தின் இசைவாணி,
இந்திய திரையுலகத்தின் கலைவேணி, பாடகி வாணி ஜெயராம் அவர்களுடைய மறைவு என் மனதுக்கு அதிர்ச்சி அளித்தது.

அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

இப்படிக்கு, இசை அமைப்பாளர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கத்தின் கௌரவ ஆலோசகர் -  டி ராஜேந்தர் எம்.ஏ." என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Director T Rajendar Condolences to Singer Vani Jayaram Demise

People looking for online information on T Rajendher, Vaani Jayaram will find this news story useful.